குறள் 1041
குறள் 1041: இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது மு.வ உரை: வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும். சாலமன் பாப்பையா உரை: இன்மையை விடக் கொடியதுஎது என்றால், இல்லாமையை விடக் கொடியது இல்லாமையே. கலைஞர் உரை: வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை.