குறள் 1270

குறள் 1270:

 

பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்
மு.வ உரை:
துன்பத்தைத் தாங்காமல் மனம் உடைந்து அழிந்து விட்டால், நம்மைத் திரும்பப்‌ பெறுவதனால் என்ன? பெற்றக்கால் என்ன? பெற்றுப் பொருந்தினாலும் என்ன?
சாலமன் பாப்பையா உரை:
என் பிரிவைத் தாங்காமல் உள்ளம் உடைய, அவளுக்கு ஒன்று ஆகிவிட்டால் அதன் பிறகு அவள் என்னைப் பெறுவதால் ஆவது என்ன? பெற்றால்தான் என்ன?
உடம்போடு கலந்தால்தான் என்ன? ஒரு பயனும் இல்லை.
கலைஞர் உரை:

துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் நிலையிழந்து போயிவிடுமானால், பிறகு ஒருவரையொருவர் திரும்பச் சந்திப்பதனாலோ, சந்தித்துக் கூடவதினாலோ, என்ன பயன்?


Kural 1270


Perinennaam Petrakkaal Ennaam Urinennaam
Ullam Udaindhukkak Kaal

Kural Explanation: After (my wife) has died of a broken heart, what good will there be if she is to receive me, has received me, or has even embraced me?

Leave a Comment